திருக்கோவில் காயத்திரி கிராமத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம்

திருக்கோவில் காயத்திரி கிராமத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரன உதவிகள் அம்பாறை மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரகாலமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இவ் நிவாரண உதவிகள் சுவிஸ் நாட்டு புலம்பேர் தமிழ் சமூகத்தின் நிதி உதவியுடன் ஒரு குடும்பத்திற்கு சுமார் 2000 ரூபா பெருமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டு இருந்தன.

இவ் உலர் உணவுப் பொதிகள் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன் அவர்களால் நேற்று ஞாயிற்றுக்கிழமை(08) திருக்கோவில் பிரதேச செயலக சமூக சேவைகள் கட்டடத்தில் வைத்து மக்களிடம் கையளிக்கப்பட்டு இருந்தன.

இதன்போது சுவிஸ் நாட்டு உதயம் அமைப்பின் பொருளாளர் க.துரைநாயகம், இலங்கைக் கிளையின் கிழக்கு மாகாண உபதலைவர் கண.வரதராஜன்; பொருளாளர் பாவலர் அக்கரை பாக்கியம் நாகேந்திரன் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் திருமதி செல்வி மனோகரன் திருக்கோவில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்திருந்தனர்.

 

திருக்கோவில் தினகரன் நிருபர்-

Mon, 12/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை