ஒரு வருடத்திற்குள் மூன்றாவது தேர்தலுக்கு செல்லும் இஸ்ரேல்

புதன்கிழமை காலக்கெடுவுக்கு முன்னர் இஸ்ரேலின் இரு பெரிய கட்சிகளும் அதிகாரப் பகிர்வு ஒப்பந்தத்தை செய்துகொள்ளத் தவறியதை அடுத்து, ஒரு வருடத்திற்குள் மூன்றாவது பொதுத் தேர்தலுக்கு இஸ்ரேல் தயாராகின்றது.

இஸ்ரேலின் வலதுசாரி லிக்குயிட் கட்சிக்கு தலைமை தாங்கும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரை எதிர்த்துப் போட்டியிடும் முன்னாள் இராணுவத் தலைவரும், மையவாத நீல மற்றும் வெள்ளை கூட்டணியின் தலைவருமான பென்னி காண்ட்ஸால் செப்டம்பர் பொதுத் தேர்தலைத் தொடர்ந்து ஒரு ஆளும் கூட்டணியை உருவாக்க முடியாமற்போய்விட்டது.

வாக்கெடுப்புக்குப் பின்னர் அரசாங்கத்தை அமைக்க முன்னணி கட்சிகள் தவறியமை இது இரண்டாவது முறையாகும்.

120 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க ஜனாதிபதி ருவன் ரிவ்லின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாய்ப்பளித்திருந்தார், ஆனால் அதுவும் தோல்வியடைந்தது, இதனால் நாடு எதிர்வரும் மார்ச் 2ம் திகதி தேர்தலுக்கு செல்லும்.

காண்ட்ஸ் மற்றும் நெதன்யாகு செப்டம்பர் 17ஆம் திகதியன்று தேர்தலை இரண்டாவது முறையாக எதிர்கொண்டனர், லிக்குயிட் கட்சி வென்ற 32 ஆசனங்களுடன் ஒப்பிடும்போது ப்ளு அண்ட் வயிட் 33 இடங்களை வென்றது, ஏப்ரல் தேர்தலுக்குப் பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் அரசாங்கத்தை உருவாக்க முடியாததால் மீண்டும் இத்தேர்தல் நடத்தப்பட்டது. எவ்வாறாயினும், தீவிர வலதுசாரி கட்சியை வழிநடத்தும் அவிக்டோர் லிபர்மேன், எந்தவொரு வேட்பாளரையும் ஆதரிக்க மறுத்துவிட்டதால், எந்தவொரு கட்சித் தலைவராலும்; 61 இடங்களைப் பெற முடியவில்லை.

மூன்று கட்சிகளை உள்ளடக்கிய ஒரு தேசிய ஒற்றுமை அரசாங்கத்தை அமைத்து பிரதமர் பதவியை சுழற்சிமுறையில் வகிக்கும் முயற்சி நெத்தன்யாகு மற்றும் காண்ட்ஸ் ஆகியோர் யார் முதலில் பிரதமராக பணியாற்ற வேண்டும் என்பதில் இணக்கம் காணாமையால் தோல்வி கண்டது.

கடந்த மாதம், ஊழல், இலஞ்சம், நம்பிக்கையை மீறுதல் மற்றும் மோசடி செய்ததாக நெத்தன்யாஹு குற்றம் சாட்டப்பட்டார், இது அவர் பதவியில் நீடிப்பதற்கான முயற்சியை கடினப்படுத்தும்.

இஸ்ரேல் நிறுவனமொன்று சமீபத்தில் நடத்திய கருத்துக் கணிப்பின்படி, நெதன்யாகு மீது குற்றம் சாட்டப்பட்ட பின்னர் அவர் பதவி விலக வேண்டும் என்று 59 சதவிகித இஸ்ரேலியர்கள் விரும்புவதாகக் கூறுகின்றனர். இஸ்ரேலிய சட்டத்தின் கீழ், குற்றம் நிரூபிக்கப்பட்டால் நெதன்யாகு தனது பதவியை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படுவார், ஆனால் முறையீடுகள் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கும்போது பதவியில் இருக்க முடியும். குற்றச்சாட்டு மற்றும் விசாரணையின் முழு செயல்முறையும் இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கும்.

தம்மீதான குற்றச்சாட்டுக்களை நெதன்யாகு மறுத்துள்ளார், ஆட்சிக் கவிழ்ப்புக்கு முயற்சித்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இஸ்ரேலிய பத்திரிகையாளரான மெரோன் ராபோபோர்ட், இஸ்ரேலில் மிக நீண்ட காலம் பிரதமராக இருந்த நெதன்யாகுவை 'அதிகாரத்தை இழந்த மன்னர்' என வர்ணித்தார்.

நெதன்யாகு மற்றும் அவரது வலதுசாரி முகாமும் ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட மிகவும் பலவீனமானதாக உள்ளது, வரவிருக்கும் தேர்தலில் லிக்குயிட் கட்சி சில இடங்களை இழக்க நேரிடும்.

செப்டெம்பர் தேர்தலுக்கு முன்னதாக நெதன்யாகு ஜோர்தான் பள்ளத்தாக்கு பகுதியை மேற்குக் கரையுடன் இணைக்க முயற்சிக்கக் கூடும்.

Fri, 12/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை