மட்டு நகரில் காற்றுடன் அடை மழை

மரங்கள் முறிந்து பாடசாலை சேதம்; போக்குவரத்து ஸ்தம்பிதம்

மட்டக்களப்பில் நேற்று மாலை வீசிய கடும் காற்று காரணமாக மட்டக்களப்பு நகர் மற்றும் தேற்றாத்தீவு ஆகிய பகுதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன. இதனால் போக்குவரத்து தடைப்பட்டதுடன் பாடசாலையொன்றும் சேதமாகியுள்ளது.

தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலயத்திலிருந்த வேப்பம் மரம் முறிந்து வீழ்ந்ததில் பாடசாலைக் கட்டடம் சேதமடைந்துள்ளது. பாடசாலை விடுமுறை என்பதால் உயிர்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

எனினும் பாடசாலை கட்டடம் சேதமடைந்துள்ளதுடன் பாடசாலை கட்டடத்திற்குள்ளிருந்த கற்றல் உபகரணங்களும் சேதமடைந்துள்ளன.

இதேபோன்று நேற்று மட்டக்களப்பு நகரில் சின்ன வைத்தியசாலைக்கு அருகிலிருந்த மரம் வீழ்ந்ததன் காரணமாக மட்டக்களப்பு நகர் ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையிலான குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று வீழ்ந்த மரத்தை அகற்றினர்.

மட்டக்களப்பு குறூப் நிருபர்

Fri, 12/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை