அவுஸ்திரேலிய - நியூசிலாந்து பொக்ஸிங் டே டெஸ்ட் இன்று

அவுஸ்திரேலிய - நியூசிலாந்து பொக்ஸிங் டே டெஸ்ட் இன்று-Boxing-Day-Test-AUSvNZ

அவுஸ்திரேலிய-நியூசிலாந்து அணிகள் மோதும் பொக்ஸிங் டே (டிசம்பர் 26) டெஸ்ட் போட்டி இன்று அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் மைதானத்தில் இடம்பெறுகிறது. 

இந்த போட்டியில் நியூசிலாந்து அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. 

நியூசிலாந்து அணி 1987ம் ஆண்டு மெல்பேர்ன் அரங்கில் தனது முதல் பொக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆடியமை குறிப்பிடத்தக்கது. 

இரு அணிகளும் மோதிய பகலிரவு டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேய அணி 296 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. 

நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்கு ஆஸி சென்றுள்ளது. 

இரு அணிகளும் நேற்று பயிற்சியில் ஈடுபட்டன. 

நியூசிலாந்து அணியின் தலைவர் வில்லியம்சன் கருத்து தெரிவிக்கையில்: நாங்கள் கடந்த போட்டியில் விட்ட தவறுகளை பாடமாக எடுத்துக் கொண்டு இந்த போட்டியில் சிறப்பாக ஆடவுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார். 

கடந்த போட்டியில் பங்கேற்காத ரென்டன் போல்ட் பங்குபற்றுகிறார். 

அத்துடன் அவுஸ்திரேலிய அணி சார்பாக 5 பந்துவீச்சாளர்களை களமிறக்கவுள்ளதாக ஆஸி அணியின் தலைவர் ரிம் பெய்ன் தெரிவித்தார்.அத்துடன் குயின்ஸ்லாந்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் மிச்சல் நசர் தனது கன்னிப் போட்டியில் பங்கெடுக்கிறார். 

ஆஸி அணி 2013 ம் ஆண்டு சிட்னியில் இலங்கை அணிக்கு எதிராக இடம்பெற்ற டெஸ்ட் போட்டிக்கு பிறகு 5 பந்துவீச்சாளர்கள் பங்கேற்கின்றமை குறிப்பிடத்தக்கது.   

Thu, 12/26/2019 - 10:35


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை