ஹிரோசிமா அணு குண்டில் தப்பிய இரு கட்டடங்களை தகர்க்க முடிவு

1945 ஆம் ஆண்டு அணுகுண்டு தாக்குதலில் தப்பிய இரு கட்டடங்களை தகர்ப்பதற்கு ஜப்பானின் ஹிரோசிமா நகர நிர்வாகம் திட்டமிட்டிருக்கும் நிலையில் அந்தக் கட்டடங்களை ஞாபகார்த்தமாக வைத்திருப்பதற்கு நகரின் சிலர் வலியுறுத்தி வருகின்றனர்.

1913 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இரு பகுதிகளைக் கொண்ட இந்தக் கட்டடம் இராணுவ ஆடைத் தொழிற்சாலையாக இருந்து பின்னர் பல்கலைக்கழக மாணவர்களின் இருப்பிடமாக மாற்றப்பட்டது.

குண்டுத் தாக்குதலுக்குப் பின் இந்தக் கட்டடம் தற்காலிக மருத்துவமனையாக பயன்படுத்தப்பட்டது. “அணு ஆயுதத்தை ஒழப்பதற்கு ஒரு பிரசார சாதனமாக இதனை பயன்படுத்தலாம்” என்று உயிர் தப்பிய ஒருவர் குறிப்பிட்டார்.

அணு குண்டு தாக்குதலின் நேரடி விளைவாக சுமார் 80,000 பேர் கொல்லப்பட்டதோடு, மேலும் 35,000 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலால் நகரின் பெரும் பகுதி தரைமட்டமாக்கப்பட்டது.

இதில் தப்பிய இந்தக் கட்டடம் வலுவூட்டப்பட்ட கொங்றீட்டினால் கட்டப்பட்டதோடு, குண்டுவெடிப்பின் சேதங்களை இன்று காண முடியுமாக உள்ளது.

தற்போது அரசுக்குச் சொந்தமாக இருக்கும் இந்தக் கட்டடம் பலமான பூகம்பம் ஒன்றினால் தரைமட்டமாகும் ஆபத்து இருப்பதாக 2017 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

பொதுமக்களுக்காக திறக்கப்படாத நிலையில் இருக்கும் இந்தக் கட்டடத்தை 2022 ஆம் ஆண்டு இடிப்பதற்கு உள்ளுர் அரசு தீர்மானித்துள்ளது.

Tue, 12/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை