சலாஹ்வின் கோல்களால் லிவர்பூல் அணிக்கு வெற்றி

இங்கிலாந்து ப்ரீமியர் லீக்கில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தும் லிவர்பூல் அணி மொஹமட் சலாஹ்வின் இரட்டை கோல் மூலம் வட்போர்ட் அணிக்கு எதிரான போட்டியை 2 -– 0 என வெற்றியீட்டியது.

ஆன்பீல்டில் நடைபெற்ற இந்தப் போட்டியில் அபாரமாக பந்தைக் கடத்தி வந்து தொலைவில் இருந்து மேலால் உதைத்து முதல் கோலை புகுத்தினார் சலாஹ். முதல் பாதியில் பெறப்பட்ட இந்த கோலை தொடர்ந்து வட்போர்ட் இரண்டு பாதிகளிலும் இரு கோல் வாய்ப்புகளை தவறவிட்டதோடு லிவர்பூலின் சாடியோ மானே தலையால் முட்டிய கோல் ஓப் சைட்டாக நிராகரிக்கப்பட்டது. எனினும் போட்டியின் 90 ஆவது நிமிடத்தில் வைத்து சலாஹ் தனது இரண்டாவது கோலையும் பெற்றார்.

இந்த வெற்றியுடன் லிவர்பூல் இரண்டாவது இடத்தில் இருக்கும் லெய்சஸ்டர் சிட்டியை விடவும் 11 புள்ளிகள் இடைவெளியுடன் முதலிடத்தில் உள்ளது.

மறுபுறம் வட்போர்ட் வெறுமனே 9 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் நீடிக்கிறது.

Mon, 12/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை