வரி குறைப்பின் பயன் க்களை சென்றடைகிறதா?

 அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராய்வு

குறைக்கப்பட்ட வரிச் சலுகைகள் மக்களுக்கு கிடைக்கப் பெறுகிறதா என அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய கவனத்தை செலுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்திலேயே வற் வரி உட்பட 8 முக்கிய வரிகள் குறைக்கப்பட்டன.

வற் வரி 17 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக குறைக்கப்பட்டது.

அத்தியாவசிய பொருட்கள்மீது முக்கிய தாக்கம் செலுத்தும் வற் வரி குறைக்கப்பட்டும் இன்னமும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் பாரிய மாற்றங்கள் ஏதும் நிகழவில்லை.

அதேபோன்று கோதுமை மா இறக்குமதிக்கான வரியும் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. கோதுமை மாவின் விலை குறைக்கப்படாமல் பேக்கரி உணவுகளின் விலையை குறைக்க முடியாத சூழல் நிலவுவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் வரி சலுகை மக்களுக்கு கிடைக்காமை குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளதாக  அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார். இதேவேளை, கோட்டாபய ராஜபக்ஷவும் இதுதொடர்பில் ஆராயுமாறு துறைசார் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

Mon, 12/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை