வென்டேஜ் எப்.ஏ. கிண்ண கால்பந்தாட்டம்

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்பட்டு வரும் வென்டேஜ் எப்.ஏ. கிண்ண கால்பந்தாட்ட தொடரில் 32 அணிகளுக்கிடையிலான முக்கியமான போட்டியொன்று நாளை ஞாயிற்றுக்கிழமை (22) கொழும்பு பெத்தகன கால்பந்தாட்ட அரங்கில் இடம்பெறவுள்ளது. 64 சுற்றில் நீர்கொழும்பு ஜூபிட்டர்ஸ் கால்ப்பந்தாட்ட கழகத்தினை 06 : 00 கோல்களினால் வெற்றி கொண்ட யாழ்ப்பாணம் குருநகர் பாடும் மீன் (சிங்கிங் பிஷ்) கால்ப்பந்தாட்ட கழகமும், மற்றுமொரு 64 அணிகளுக்கிடையிலான போட்டியில் மன்னார் விடத்தல்தீவு யுனைட்டட் கால்ப்பந்தாட்ட கழகத்தினை 03 : 02 கோல்களினால் வெற்றியீட்டி தொடர்ந்து மூன்றாவது முறையாக 32 சுற்றுக்குள் பிரவேசித்துள்ள புத்தளம் லிவர்பூல் கால்ப்பந்தாட்ட கழகமும் இந்த முக்கியமான ஆட்டத்தில் பங்கெடுக்க உள்ளன.

Sat, 12/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை