'புட்சால் என்கவுண்டர்' உதைபந்தாட்ட போட்டி

கொழும்பு சாஹிரா கல்லூரி 2007 ஆம் ஆண்டி பழைய மாணவர் குழு ஒழுங்கு செய்த புட்சால் என்கவுண்டர் உதைபந்தாட்ட போட்டி இரண்டாவது ஆண்டாக பேலியகோட விளையாட்டு உலக Sports World Peliyagoda இல்லத்தில் நடைபெற்றது.

இறுதி போட்டியில் 2107 ஆண்டு குழு வெற்றிபெற்றனர். அதன் தலைவர் பரூட் பாயிஸ் வெற்றி கிண்ணத்தையும் மற்றும் ரூ. 50, 000 ரொக்கப் பரிசு யும் பிரதம அதிதி ஷொப்பிங்க்லிஸ்ட் டொட் எல்கே Shoppinglist,lk நிருவனத்தின் பணிப்பளார் எம்.எஸ்.ஏ. மொஹமட் மற்றும் 2013 குழுவின் தலைவர் சஜீர் அஹ்மட் இரண்டாம் இடத்துக்கான விருதையும், ரூ. 30,000 ரொக்கப் பரிசுயும் May Fair Holidays மே பெயர் ஹொலிடேஸ் பணிப்பாளர்கள் ஹமீத் சாதிக் மற்றும் இர்ஷாத் ஜாபீர் ஆகியோரிடமிருந்து பெற்றுக்கொண்டார்கள் .

2007 குழுவின் தலைவர் மொஹமட் ரிசாத், செயலாளர் மொஹமட் தஸ்லீம், திட்டத் தலைவர் சிராஜ் சாலி, ஒருங்கிணைப்பாளர் அர்ஷத் ஜலீல், சாஹிரா கல்லூரி பழைய மாணவர் சங்க செயலாளர் நுஸ்ரி முன்சூர், விளையாட்டு செயலாளர் மொஹமட் காசிம் மற்றும் பொருளாளர் ஹாசிக் ஜலீல் , 2007 குழுவின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ருசைக் பாரூக்

Sat, 12/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை