சம்பிக்க எம்.பியின் கைது சிறப்புரிமையை மீறியதல்ல

பாராளுமன்றம் கூட்டப்படாத சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை கைதுசெய்வது சிறப்புரிமையை மீறுவதாக அமையாதென பிவித்துரு ஹெல உருமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள பிவித்துரு ஹெல உருமய கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

நாட்டின் சட்டம் என்னவென தெரியாத ஐ.தே.க  எம்.பி.க்கள் ஊடகங்களில் சில குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். சபாநாயகருக்கு தெரிவிக்காது சம்பிக்க ரணவக்கவை அவரது வீட்டில் கைதுசெய்துள்ளதாக கூறுகின்றனர். சட்டவிரோதமாக பொலிஸார் தமது வீட்டுக்குள் உட்புகுந்ததாகவும் சம்பிக்க ரணவக்கவும் மரண பீதியடைந்தார். இந்த கைது பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறலெனவும் தெரிவிக்கின்றனர்.

நாட்டின் சட்டம் என்னவென தெரியாத ஐ.தே.க எம்.பிக்களே இவ்வாறு கூறிவருகின்றனர். 1953ஆம் ஆண்டு 23ஆம் இலக்க பாராளுமன்ற அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள் சட்டமாகும். இச் சட்டத்தின் பிரகாரம் எம்.பி. ஒருவர் பாராளுமன்றம் செல்லும் போதும், பாராளுமன்றத்தில் இருக்கும் போதும், பாராளுமன்றச் செயற்பாடுகளை முடித்துக்கொண்டு வீடுநோக்கி வரும்போதும் கைதுசெய்யப்பட்டாலே அது எம்.பிகளின் சிறப்புரிமை மீறப்படும் சந்தர்ப்பமாக அமையும்.

வீட்டிலிருந்த சம்பிக்க ரணவக்க எம்.பியை கைது செய்தமையால் எம்.பிகளின் சிறப்புரிமை மீறப்படவில்லை. கைது உத்தரவுக்கூட இல்லாது அவர் கைதுசெய்யப்பட்டதாகவும் கூறியிருந்தார். நீதிபதி ஒருவரின் தீர்ப்பையும்விட சட்ட மாஅதிபரின் உத்தரவு பலமானதாகும் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Sat, 12/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை