'மொட்டு' சின்னத்திலேயே அடுத்த தேர்தலில் போட்டியிட வேண்டும்

கடந்த காலத்தில் கைவிடப்பட்ட சின்னங்களை கைவிட்டு மொட்டுச் சின்னத்தில் தான் எதிர்வரும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என சுற்றாடல் மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன தெரிவித்துள்ளார்.

சின்னத்திற்கு அன்றி நபர்களுக்கே மக்கள் வாக்களிப்பதாக கூறிய அவர், மொட்டு சின்னமே மக்கள் மத்தியில் பிரபலமானது என்றும் குறிப்பிட்டார். இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நாம் 50 இலட்சம் வாக்குகளை பெற்றுள்ளோம். கடந்த பொதுத் தேர்தலில் 69 இலட்சம் வாக்குகள் மொட்டுச் சின்னத்திற்கு கிடைத்தது.

மொட்டு சின்னம் தான் மக்கள் மத்தியில் பிரபலமான சின்னமாகும்.

எனவே கடந்த காலத்தில் கைவிடப்பட்ட சின்னங்களை ஒதுக்கி மொட்டுச் சின்னத்திலே போட்டியிட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ரணிலோ, சஜித்தோ யார் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு வந்தாலும் இரண்டு தடவைகள் கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாவதை யாராலும் தடுக்க முடியாது. ஐ.தே.கவிற்குள் மோதல் அதிகரித்துள்ளது.

ரஞ்சன் ராமநாயக்க,மங்கள சமரவீர ஆகியோருக்கு வேட்புமனு கொடுக்கக் கூடாது என கோரிக்கை வலுத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். (பா)

Tue, 12/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை