மத்திய வங்கியின் ஆளுநராக பேராசிரியர் லக்‌ஷ்மன்

இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக தேசமான்ய பேராசிரியர் டபிள்யு.டி. லக்ஷ்மன் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய வங்கியின் புதிய ஆளுநர் நேற்று (24) ஜனாதிபதி அலுவலகத்தில் தனது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார்.

1994 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை கொழும்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக கடமையாற்றிய அவர், இலங்கையின் புகழ்பெற்ற ஒரு பொருளாதார நிபுணராவார்.

கல்வித்துறைக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்காக பேராசிரியர் டபிள்யூ.டி.லக்ஷ்மனுக்கு 2005ஆம் ஆண்டு தேசமான்ய விருது வழங்கப்பட்டது. பேராசிரியர் டபிள்யூ.டி.லக்ஷ்மன் இலங்கை மத்திய வங்கியின் 15ஆவது ஆளுநராக பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Wed, 12/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை