புதிய அரசு அனைத்து நாடுகளுடனும் நட்புறவுடன் செயற்படும்

புதிய அரசாங்கம் அனைத்து நாடுகளுடனும் நட்புறவுடன் செயற்படும் கொள்கையை பின்பற்றும் என அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இலங்கையை இந்து சமுத்திரத்தில் முக்கிய வர்த்தக சேவை கேந்திர நிலையமாக உருவாக்குவதற்கு தம்முடன் இணைந்து கொள்ளுமாறு சவூதி அரேபிய அரசாங்கத்திற்கு அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். சவூதி அரேபியாவின் 48 ஆவது தேசிய தின நிகழ்வு சங்கரில்லா ஹோட்டலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும்போதே அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த நவம்பர் 16ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் இலங்கை மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு அளித்து சரியான தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர். புதிய அரசாங்கம் அனைத்து இனங்கள் மற்றும் நாடுகளுடன் நற்புறவுடன் செயற்படுவதற்கு எதிர்பார்த்துள்ளது. சட்டதுறையில் சுயாதீனத்தையும் சமத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்டு செயற்படுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். இங்கு வெளிநாட்டு தலையீடு, பூகோள அச்சுறுத்தல், சமாதானத்தை பாதுகாப்பது போன்றவை கருத்திற்கொள்ளப்பட்டு உலகின் முன்னேற்றத்திற்கு சமமானதாக செயற்படுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எமது நாட்டின் பெருமளவிலான பெண்கள் சவூதி அரேபியாவிலேயே தொழில் செய்கின்றனர். அதற்கிணங்க 2,60,000 பேர் அங்கு பணிபுரிகின்றனர். கடந்த காலங்களில் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார வர்த்தக தொடர்புகள் அதிகரித்துள்ளன. ஐக்கிய அரபு இராஜ்ஜியமானது இலங்கை முதலீடுகளை மேற்கொள்ளும் முக்கிய நாடாக திகழ்கின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். (ஸ)

 

Wed, 12/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை