மினிச் சூறாவளி போன்றதே சிறிகாந்தாவின் புதிய கட்சி

சிறிய விடயத்துக்காக பிரிந்து சென்றமை கவலையளிக்கிறது

ரெலோவிலிருந்து பிரிந்து சென்று சிறிகாந்தா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள புதிய கட்சி எமக்கு மினி சூறாவளி போன்றது. எமது கட்சி இப்போதும் மிக பலமாகவே உள்ளது. எனவே பொதுத் தேர்தலில் யாழ்.மாவட்டத்திலிருந்து எமது கட்சியை சேர்ந்தவர் ஒருவர் பாராளுமன்றம் செல்லவதற்கு தொண்டர்கள் அயராது உழைக்க வேண்டும் என ரெலோ கடசியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

யாழ்.நாவலர் மண்டபத்தில் ரெலோ கட்சியை சேர்ந்த உறுப்பினர்களுடன் கலந்துரையாடும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

ரெலோ கட்சியில் இருந்து சிலர் விலகி சென்றுள்ளனர். அவ்வாறு சென்றவர்கள் புதிய கடசியை ஆரம்பித்துள்ளனர். இது எமக்கு சிறிய சூறாவளி தாக்கம் மட்டுமே. எனினும் எமது கட்சி மிக பலமாகவே உள்ளது. தமிழ் தேசிய கூட்ட்டமைப்பு உருவாக்கப்பட முன்னின்று செயற்பட்ட கடசி எமது கட்சி மட்டுமே.

எமது கட்சியிலிருந்து எங்களை உருவாக்கிய எம்மை வழிநடத்திய முன்னாள் பொது செயலாளர் சிறிகாந்தா சிறிய விடயத்திற்காக பிரிந்துள்ளமை கவலையளிக்கிறது. தமிழரசுக் கட்சியின் மீது கோபத்தில் அவர்களுடன் இணைந்து செயற்பட முடியாது என தனி கட்சியை ஆரம்பித்துள்ளார். இது எமக்கு வருத்தத்தை தருகின்றது.

எங்களின் நிலைப்பாடு 5 தமிழ் தேசிய கட்சிகளும் முன்னரை போல இணைந்து மிக பலமாக செயற்பட வேண்டும் என்பதே. நாம் ஒற்றுமையையே விரும்புகின்றோம். அப்படியானால் தான் நாம் எதிர்வரும் பொது தேர்தலில் 22 ஆசனங்களை பெற முடியும். இதனை விடுத்து தமிழர்களிடையே புதுப் புது கட்சிகள் வரும் போது வாக்குகள் சிதறும்.

பருத்தித்துறை விசேட நிருபர்

 

Mon, 12/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை