பலஸ்தீன வரிப்பணத்தை முடக்கியது இஸ்ரேல்

பலஸ்தீனத்தின் 43 மில்லியன் டொலர் வரிப் பணத்தை முடக்குவதற்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தப் பணத்தின் ஒரு பகுதி இஸ்ரேல் மீதான தாக்குதல்களுக்கு சிறை தண்டனை அனுபவிக்கும் பலஸ்தீனர்களின் குடும்பங்களுக்கு செலவிடப்படுவதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.

உயிர்தியாகிகள் குடும்பங்களுக்கு நிதி அளிப்பது விதி மீறல் என்று இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது. எனினும் வன்முறை மற்றும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ இந்த நிதி அவசியம் என்று பலஸ்தீன தரப்பு வலியுறுத்துகிறது.

கடந்த கால உடன்படிக்கையின்படி பலஸ்தீனர்களிடம் இருந்து அறவிடும் சுங்க வரி மற்றும் ஏனைய வரிகள் பலஸ்தீன அதிகாரசபைக்கு பரிமாற்றப்படுகிறது.

இவ்வாறு மாதாந்தம் பரிமாற்றப்படும் சுமார் 170 மில்லியன் டொலர் நிதி பலஸ்தீன நிர்வாக செயற்பாடுகளில் தீர்க்கமானதாக உள்ளது.

இந்நிலையில் இந்த நிதியில் போராளிகளின் குடும்பங்களுக்கு செலவிடப்படும் தொகையை கழிப்பதற்கு இஸ்ரேலில் கடந்த ஆண்டு சட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டது.

அதன் அடிப்படையிலேயே இஸ்ரேல் இந்த புதிய முடிவை அறிவித்துள்ளது.

Tue, 12/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை