நாடு பற்றியெரியும் போது சுற்றுலா சென்ற ஆஸி. பிரதமர் மன்னிப்பு

அவுஸ்திரேலியாவில் காட்டுத் தீ தீவிரம் அடைந்திருக்கும் நிலை யில் விடுமுறையில் வெளிநாடு சென்ற அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

தன் மீதான விமர்சனம் அதிகரித்ததை அடுத்து மொரிசன் தனது ஹவாயி பயணத்தை பாதியில் நிறுத்திக் கொண்டு நாடு திரும்பினார்.

அவுஸ்திரேலியாவின் மூன்று மாநிலங்களில் காட்டுத் தீ பரவி இருப்பதோடு கடந்த சனிக்கிழமை ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த செப்டெம்பர் தொடக்கம் அவுஸ்திரேலியாவில் காட்டுத் தீ அவசரநிலை நீடிப்பதோடு குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டு 700க்கும் அதிகமான வீடுகள் அழிந்துள்ளன. இதனால் மில்லியன் கணக்கான ஹெக்டர் காணி தீயில் கருகியுள்ளது.

புவிவெப்பமயமாதல்தான் இந்த காட்டுத்தீக்கு முக்கிய காரணமென கூறப்படுகிறது. இதனை எதிர்கொள்ள அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகப் பிரிட்டன் துணைப் பிரதமர் மிக்கேல் தெரிவித்துள்ளார்.

மக்கள் மிகுந்த அழுத்தத்தில், மன உளைச்சலில் உள்ள போது நான் குடும்பத்துடன் சுற்றுலா சென்றதை அறிந்து அவர்கள் கோபத்திலிருந்ததை புரிந்துகொள்ள முடிகிறது என்று மொரிசன் தெரிவித்தார்.

40 டிகிரி செல்சியஸுக்கு அதிகமான வெப்பம், குறைவான ஈரப்பதம், பலத்த காற்று, இவைதான் இப்போதைய சூழலுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. தீயைக் கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் 3000 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கடுமையான வறட்சி காலத்தில் நாம் இருக்கிறோம். பல பகுதிகளில் கடந்த 12 மாதங்களாக ஒரு சொட்டு மழைகூட பெய்யவில்லை என்று நியுூ சவுத் வேல்ஸ் தீயணைப்புத் துறை அதிகாரி செப்பர்ட் தெரிவித்தார்.

Mon, 12/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை