நாரேஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்துக்கு ஜனாதிபதி திடீர் விஜயம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாரஹேன்பிட்டி விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்கு திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். வழங்கப்பட்டுள்ள வரிச் சலுகைகள், அத்தியாவசிய நுகர்வுப்பொருட்களின் விலைகளில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் குறித்து ஜனாதிபதி இதன்போது விசேட கவனம் செலுத்தினார்.

நேற்றுமுன்தினம் மாலை சுமார் 07.30 மணியளவில் ஜனாதிபதி சென்றிருந்தார். அங்கிருந்தவாறே நிதியமைச்சு மற்றும் நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்புகொண்ட ஜனாதிபதி, வரிச் சலுகைகளின் நன்மைகள் உரிய முறையில் வியாபாரிகளுக்கும் மக்களுக்கும் கிடைக்கின்றதா? என்பது தொடர்பில் விழிப்பாக இருக்குமாறு அறிவுறுத்தினார்.

Fri, 12/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை