தேர்தல் முடிவை எதிர்த்து லண்டனில் ஆர்ப்பாட்டம்

பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி மிகப்பெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், அந்தத் தேர்தல் முடிவை எதிர்த்து லண்டனில் நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

லண்டனில் டவுனிங் வீதியில் திரண்ட போராட்டக்காரர்கள், அங்குள்ள பொரிஸ் ஜோன்சனின் வீட்டில் இருந்து டிராபல்கர் சதுக்கம் வரை கண்டன பேரணி சென்றனர். அப்போது அவர்கள், பொரிஸ் ஜோன்சன் எங்களது பிரதமர் இல்லை, பொரிஸ் ஜோன்சன் பதவி விலக வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினர்.

இந்த போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது பொலிஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Mon, 12/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை