பிரச்சினைகளை தீர்க்குமாறு வீதியை மறித்து போராட்டம்

பிரச்சினைகளை தீர்க்குமாறு வீதியை மறித்து போராட்டம்-Road Blocking Protest-Tharmapuram Kilinochchi

கிளிநொச்சி, பரந்தன் ஏ-35 விதியின் வெள்ள பாதிப்பை தடுக்கும்வகையில்  தர்ம்புரம், நெத்தலியாற்றுப் பாலத்தினை  மீளமைக்குமாறும்
வெள்ளத்தினால் சேதமடைந்த வீதிகளை புனரமைக்க  கோரியும் தர்மபுரத்தில் உள்ள அடிப்படை பிரச்சனைகளை தீர்க்கக் கோரியும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று (15) காலை பத்து மணியளவில் நெத்தலியாறு காலத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் பெருமளவானோர் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

பிரச்சினைகளை தீர்க்குமாறு வீதியை மறித்து போராட்டம்-Road Blocking Protest-Tharmapuram Kilinochchi

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்  சிறிது நேரம் ஏ35 வீதியின் ஒருபகுதியையும் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் முடிவில் நாட்டினுடைய ஜனாதிபதிக்கு அனுப்ப மகஜர் ஒன்றினையும் தர்மபுரம் புனித சபேரியார் ஆலய  பங்குத்தந்தை அன்ரனி வின்சன் சில்வஸ்டர் தாஸிடம்  கையளித்தனர்.

பிரச்சினைகளை தீர்க்குமாறு வீதியை மறித்து போராட்டம்-Road Blocking Protest-Tharmapuram Kilinochchi

குறித்த மகஜரில்,

தர்மபுரம் பகுதியில் வசித்துவரும் நாங்கள் இலங்கையின் தென்பகுதியில் இருந்து 1958 ஆம் ஆண்டு அக்கால இலங்கை ஜனாதிபதியின் பணிப்பிற்கமைய ஒரு குடும்பத்திற்கு ஒரு ஏக்கர்  என்ற   ரீதியில் கிராம விஸ்தரிப்பு திடடத்தின் கீழ் வழங்கப்பட்டு சுமார் 56 வருடங்கள் நிரந்தரமாக வாழந்து வருகின்றோம் அந்த வகையில் அரசுக்கு நன்றி தெரிவிக்கின்றோம்.

பிரச்சினைகளை தீர்க்குமாறு வீதியை மறித்து போராட்டம்-Road Blocking Protest-Tharmapuram Kilinochchi

இந்த நிலையில் அரசினால் 1000 பாலத்திட்டத்தின் மூலம் 2016 ஆம் ஆண்டு எமது கிராமத்தில் உள்ள ஏ35 வீதியின் நெத்தலி ஆற்றுப் பாலம் புதிதாக கேடர் பாலமாக அமைக்கப்படும்  போது எமது கிராமத்தில் வசிக்கும் அனுபவம் வாய்ந்த முதியவர்களும், பொது  அமைப்புக்களுமாகிய  நாமும் சம்பந்தப்படட பிரதம பொறியியலாளர் அவர்களுக்கும் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி அதிகார சபையினரிடமும் எழுத்து மூலம் எமது பகுதி நிலைமைகளை எடுத்துக் கூறிய போதும் எமது கருத்துக்கள் எவையும் ஏற்றுக் கொள்ளப் படவில்லை.

பிரச்சினைகளை தீர்க்குமாறு வீதியை மறித்து போராட்டம்-Road Blocking Protest-Tharmapuram Kilinochchi

எமது கிராமத்தில் இப் பாலம் அமைக்கப்பட முன்னர்  (2016 இற்கு முன்னர் ) இவ்வாறான வெள்ளம் எமது பகுதிக்கு வருவதில்லை ஆனால் குறித்த பாலம் எமது கிராமத்தின் பிரதான வீதிக்கு கிடைத்தது மகிழ்ச்சி ஆனால் குறித்த பாலத்தின் கீழ் பகுதியில் ஆறு  அடி  நீளமான தகடு நீரில் மூழ்கிக் காணப்படுவதால் வான் பாயும் பகுதிக்கு போதிய வசதி இன்மை காணப்படுகின்றது.

எமது கிராமத்தின் மேல் பகுதியில்  கல்மடுக் குளம் காணப்படுவதால் வருடம் தோறும்ந வான் பாய்கின்றது இதனால் குறித்த பாலத்தின் தகடு மூலம் வெள்ள நீர் தடைப்பட்டு எமது கிராமத்தகிற்குள் புகுகிறது என்பதனை தங்கத்தில் மேலான கவனத்திற்கு கொண்டுவருகின்றோம்.

எமது கோரிக்கைகள் என்னவென்றால் குறித்த நெத்தலியாறு பாலத்தினை மாற்றி வெள்ளநீர் வடிந்தோடக்கூடிய பாலமாக மாற்றுவதுடன்  சிதைவடைந்துள்ள எமது பிரதேச பாலங்களையும்  புனரமைப்பதுடன்  மக்கள்  பாவனையில் உள்ள. உள்ளக வீதிகள் பல புனரமைக்கப்படாமல் உள்ளது.

எமது பிரதேசத்தில் உள்ள  சுமார் 49.5 கிலோமீற்றர் உடைய உள்ளக வீதிகளையும் கொங்கிரீற் விதிகளாக மாற்றித் தருமாறும் கடந்த வருடம்  போல் இவ் வருடமும் எமது கிராமம் வெள்ளப் பாதிபிற்கு உள்ளாகி உள்ளது என்பதனை தங்கில் மேலான கவனத்திற்கு கொண்டுவருவதுடன், ஒவ்வொரு வெள்ள  அனர்த்தத்தின் போதும் எமது பகுதியில் உள்ள தர்மபுரம் மத்திய கல்லூரி வளாகத்தி 3 அடி தண்ணீரும், தர்மபுரம் இலக்கம் ஒன்று பாடசாலையில் 4 அடித் தண்ணீரும் காணப்படுகின்றது வருடம் தோறும் எமது பிரதேச மாணவர்கள் வெள்ளத்தினால் படும் சிரமங்களையும் தங்களின்  கவனத்திற்கு கொண்டுவருகின்றோம்

அத்துடன் எமதுன் கிராமத்தின் நடுப்பகுதியால் (கண்டவளைக் கிராமத்திற்கான ) அயற்கிராமத்திர்கான விவசாய வாய்க்கால் செல்கின்றது மழைகாலத்தில் ஏற்ப்படும் வெள்ளத்தினால்  அதனூடும் கிராமத்தில் வெள்ளம் புகுகின்றது எனவே அவ் வாய்க்கலையும் ஆழப்படுத்தி கொங்கிரீற் வாய்க்காலாக மாற்றி தருமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம். என குறிப்பிடப்பட்டுள்ளது.

(எஸ்.என். நிபோஜன்)

Sun, 12/15/2019 - 14:47


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை