நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் பொறுப்பு சு.கவிடமே உள்ளது

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் எதிர்காலத்தில் உருவாகும் அரசாங்கத்தில் தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான பொறுப்பு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடமே உள்ளதென சு.கவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

சு.கவின் வடக்கு, கிழக்கு தொகுதி அமைப்பாளர்களுடன் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற விசேட சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார். பலம்வாய்ந்த அரசாங்கமொன்றை எதிர்காலத்தில் அமைக்க ஜனாதிபதிக்கு சு.க ஆதரவளிக்கும். இதில் வடக்கு, கிழக்கு மக்களின் ஆதரவையும் தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளையும் பெற்றுக்கொள்வதும் சு.கவின் பொறுப்பாகும்.

புதிய அரசாங்கத்தில் தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழும்பும் பொறுப்பும் சு.கவிடமே உள்ளது.

அடுத்த பொதுத் தேர்தலில் தமிழ், முஸ்லிம் வாக்குகளுடன் கூடிய அரசாங்கத்தை கட்டியெழுப்புவதற்காக வடக்கு, கிழக்கு தொகுதி அமைப்பாளர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Sat, 12/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை