மழை வாநிலை தொடரும்

மழை காலநிலை காரணமாக இன்றும் கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

எனினும் ஒப்பீட்டளவில் மழைவீழ்ச்சியினளவில் குறைவு காணப்படுவதாகவும் இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் பாரிய மாற்றம் இல்லையென்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

இலங்கைக்கு தென்கிழக்கே வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாகவே நாட்டில் தற்போது மழையுடன் கூடிய காலநிலை நிலவுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இக்காலநிலை மாற்றம் காரணமாக இன்று காலை முதல் கிழக்கு, ஊவா,வடமத்திய,மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அடை மழை பெய்யும் அதேவேளை ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழையை எதிர்பார்க்கமுடியுமென்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதேவேளை, அம்பாறை, மட்டக்களப்பு, பதுளை, மொனராகலை,நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களில் 100மில்லிமீற்றர் மழையும் இரத்தினபுரி, கேகாலை,காலி,களுத்துறை,அநுராதபுரம்,பொலன்னறுவை,ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் சுமார் 75மில்லிமீற்றர் மழை பெய்யுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை,ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 40கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் ஏற்படக்கூடிய கடுங்காற்று மற்றும் மின்னல் தாக்கம் குறித்து அவதானத்துடன் இருக்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதேவேளை கடலிலும் வாகரையிலிருந்து பொத்துவில் ஹம்பாந்தோட்டைக்கூடாக மாத்தறை வரையான கடல் பிரதேசம் கொந்தளிப்பாக காணப்படும் என்பதால் மீனவர்களும் கடற்படையிரும் அவதானத்துடன் செயற்பட வேண்டுமெனவும் கேட்டுக்ெகாள்ளப்பட்டுள்ளனர்.

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் பாரிய மாற்றம் இல்லையென தெரிவித்த அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் கொடிப்பிலி அதன் எண்ணிக்கை 151ஆயிரம் என உத்தியோகப்பூர்வமாக அறிவித்தார்.

மண்சரிவு எச்சரிக்ைக விடுக்கப்பட்டுள்ள பதுளை, நுவரெலியா,கண்டி,இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் வாழ்வோர் தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மழை வீழ்ச்சியினளவு குறைவடைந்து வருவதனால் நீரேந்து பகுதிகளுக்கு கிடைக்கும் நீரினளவு படிப்படியாக குறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Tue, 12/10/2019 - 08:52


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை