அரசாங்கத்திற்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்குவது அவசியம்

நாட்டை முன்னேற்றி, மாற்றங்களை ஏற்படுத்த புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் புதிய அரசாங்கத்திற்கும் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கவேண்டியது அவசியமென முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்

ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சியின் கொழும்பு மேற்கு அமைப்பாளர் எம்.எச். மன்சில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வான்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மகத்தான வெற்றியைப் பெற்றுக்கொண்டுள்ளார். அது நாட்டின் அனைத்து மக்களினதும் ஆசீர்வாதத்தால் பெற்றுக்கொள்ளப்பட்ட வெற்றியாகும் .

நாட்டின் வறுமையை ஒழிப்பதும் நாட்டின் பொருளாதாரத்தை வளப்படுத்துவதும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவையினால் தனித்து மேற்கொள்ளக்கூடிய விடயமல்ல. நாட்டு மக்கள் குறிப்பாக அரச அதிகாரிகள் இச் செயற்பாடுகளுக்கு உச்சளவு ஒத்துழைப்பு வழங்குவது முக்கியமாகும்.

புதிய அரசாங்கம் புதிய வேலைத்திட்டத்தை எதிர்காலத்தில் முன்னெடுக்கவுள்ளது. இதற்காக அரசாங்க அதிகாரிகளுக்கு பெரும் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அரசியல் தலைவர்கள் நாட்டுக்கான கொள்கைகளை அறிமுகப்படுத்தும் போது, அவற்றை நிறைவேற்றும் முக்கியமான பொறுப்பு அரசாங்க அதிகாரிகளுக்கே உள்ளது. ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனத்தில் வறுமையொழிப்பு, போதையொழிப்பு சுற்றாடல் அபிவிருத்தி, உள்ளிட்ட பல்வேறு வேலைத்திட்டங்களுக்கு முக்கியத்துவமளிக்கப்பட்டுள்ளன. அதற்கு அரச அதிகாரிகளின் அர்ப்பணிப்புடனான செயற்பாடு அவசியம் என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

 

 

Thu, 12/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை