எல்லாவற்றுக்கும் ஒலிம்பிக் சங்கத்தை குறை சொல்ல வேண்டாம்

எல்லாவற்றுக்கும் ஒலிம்பிக் சங்கத்தை குறை சொல்ல வேண்டாம்-Maxwell De Silva-Secretary General National Olympic Committee of Sri Lanka

தேசிய ஒலிம்பிக் சங்க செயலாளர் மெக்ஸ்வல் டி சில்வா

நேபாளத்தில் முடிவடைந்த 13வது தெற்காசிய விளையாட்டு விழாவில் பல பிரச்சினைகள் ஏற்படுமென அறிந்திருந்ததாகவும அங்கு பிரச்சினைகள் ஏற்படுமென அணிக்கு அறிவித்திருந்ததாகவும் கூறும் தேசிய ஒலிம்பிக் சங்க பொதுச் செயலாளர் மெக்ஸ்வல் டி சில்வா அணியின் தோல்விக்கு பின்னர் அவர்கள் தம்மீது குற்றஞ்சாட்டுவதாகவும் அனைத்துக்கும் ஒலிம்பிக் குழுவை குற்றம் சாட்டுவது நியாயமல்ல எனவும் தெரிவித்தார். 

நிறைவுபெற்ற தெற்காசிய விளையாட்டு விழா தொடர்பாக அண்மையில் ஒலிம்பிக் இல்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். 

விளையாட்டு விழாவில் கிரிக்கெட் போட்டிகளில் 23 வயதுக்கு குறைந்த வீரர்கள் போட்டியிட்ட போதும் அப்போட்டியின் சட்டதிட்டங்களுக்கமைய வயதில் கூடிய மூன்று வீரர்களை அணியில் சேர்க்க சந்தர்ப்பம் காணப்பட்டது. ஆனால் இலங்கை கிரிக்கெட நிறுவனம் அது தொடர்பாக அறிந்திருக்காததால் 23 வயதுக்கு குறைந்தவர்களை மாத்திரமே தெரிவு செய்தது. அதன் காரணமாக இலங்கை பங்களாதேஷுடன் விளையாடி வெள்ளிப் பதக்கத்தையே வென்றது. 

இவ்வாறான நிலைமை உதைபந்தாட்ட அணிக்கும் ஏற்பட்டதோடு இது தொடர்பாக இலங்கை ஒலிம்பிக் குழு மீது குற்றம் சுமத்தினார்கள். 

தோல்விக்கு காரணம் கூற வேண்டும் என்பதற்காக அனைவரும் ஒலிம்பிக் குழு மீது குற்றம் சுமத்துகின்றார்கள். ஆனால் கிரிக்கெட் அணிகளின் பிரச்சினையிலும் அது தொடர்பான தொழில்நுட்ப கையேட்டை இரண்டு வாரங்களுக்கு முன்னரே விளையாட்டு சங்கங்களுக்கு அனுப்பினோம். அவர்கள் நேபாள கிரிக்கெட் கழகங்களுடன் கலந்துரையாடி இருக்கலாம். உதைபந்தாட்டத்துக்கும் இந்த பிரச்சினை இருந்தது. நாம் கலந்துரையாடும்படி கூறினோம் என சில்வா கூறினார். 

சைக்கிளோட்டம், டைகொண்டோ கழகங்களின் பிரச்சினைகளுக்கு ஒலிம்பிக் குழு தலையிட்டு பிரச்சினை தீர்க்க உதவியது. 

2010 ஆண்டு டாக்காவில் 16 தங்க பதக்கங்களை பெற்ற இலங்கை 2016ல் குவாதியில் 25 தங்க பதக்கங்களை வென்றது. இம்முறை 40 தங்க பதக்கங்களை வென்றுள்ளது. 

அது தொடர்பில் நாம் பெருமையடையலாம். அதற்கு பங்களிப்பை வழங்கிய விளையாட்டு துறை அமைச்சு, தேசிய கழகம் மற்றும் தேசிய ஒலிம்பிக் சங்கம் இணைந்து எதிர்கால திட்டங்களை தீட்டவேண்டுமென தெரிவித்தார். 

‘தேசிய ஒலிம்பிக் குழுவின் அடுத்த இலக்கு 2022 ம் ஆண்டு ஆசிய விளையாடடு விழாவாகும். அதன்பின்னர் பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு விழா அதற்கு பின்னரே ஒலிம்பிக்கைப் பற்றி எண்ணவேண்டும்.

இம்முறை விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற திறமையான வீர வீராங்கனைகள தெரிவுசெய்து நாம் அப்பயணத்தை ஆரம்பிக்க வேண்டும். எம்மால் அனைத்து விளையாட்டுக்களையும் தெரிவுசெய்ய முடியாது என்பதால் சில விளையாட்டுக்களை தெரிவுசெய்ய வேண்டும். அடுத்த சார்க் போட்டிகளில் 80 தங்கப் பதக்கங்களையாவது வெற்றிகொள்வதே எமது இலக்கு’ என சில்வா கூறினார். 

தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவர் சுரேஷ் சுப்ரமணியம் இலங்கைக்கு இவ்வாறான வெற்றியை பெற்று தந்த அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார். 

சார்க் அணியின் தலைவராக பணியாற்றிய தம்பத் பெர்னாண்டோ ஊடக சந்திப்பின் போது இவ்வாறான சம்பவங்கள் தொடர்பாக ஏற்பாட்டாளர்களை அறிவுறுத்தியதாகவும் நூற்றுக்கு 80 விதமான பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டதாகவும் தெரிவித்தார். போட்டிக்கான ஆலோசனை கையேடுகள் போட்டிக்கு முன்னர் குறிப்பிட்ட அணிகளின் முகாமையாளர்களுக்கு வழங்கப்படும் எனக்கு கிடைத்தவற்றை நான் தேசிய ஒலிம்பிக் குழுவிடம் ஒப்படைத்தேன். அவற்றை குறிப்பிடட கழகங்களுக்கு வழங்க வேண்டியது தேசிய கழகங்களின் பொறுப்பாகும். எமக்கு குறிப்பிட்ட காலஎல்லை உள்ளது. 

இந்த சட்டங்கள் சர்வதேச சட்டதிட்டங்களுக்கு மாறாக காணப்பட்டால் குறிப்பிட்ட ஏற்பாட்டாளர்களுடன் கலந்துரையாடி தீர்வு காணலாம். ஆனால் கிரிக்கெட் தொடர்பான பிரச்சினை நேபாளத்துக்கு சென்ற பின்னரே ஏற்பட்டதென தம்பத் பெர்னாண்டோ தெரிவித்தார்.  

இதேவேளை சைக்கிளோட்டப் போட்டியில் இலங்கைக்கு தங்க பதக்கம் வெல்லக்கூடிய சந்தர்ப்பம் இல்லாமல் போனது தொடர்பாக வீரர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணையொன்று நடத்தப்படவள்ளதாகவும் ஊடகங்களுக்கு தெரியவந்துள்ளது. 

சைக்கிளோட்டப் போட்டியின் வீதிப் போட்டிகளில் திட்டத்துக்கு மாறாக சென்றமை அணியிலிருந்து விலகி முன்னாள் சென்ற வீரரொருவர் தன்னலமாக நடந்துகொண்டதால் தங்க பதக்கத்தை இழக்க நேரிட்டதாக பயிற்சியாளர் உபாலி ரத்நாயக்க அறிக்கையொன்றை வழங்கியுள்ளார். இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டவர் பிரபாத் மதுஷ்கவாகும். இவ் ஊடக சந்திப்பின் தேசிய ஒலிம்பிக் குழுவின் உபதலைவர் அஸ்க செனவிரத்ன, பொருளாளர் சேனக ரணசிங்க மற்றும் இலங்கை சார்க் அணியின் பிரதி தலைவர் காமினி ஜயசிங்க உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டார்கள்.    

Thu, 12/26/2019 - 11:17


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை