சீனா, ஜப்பான், தென் கொரிய தலைவர்கள் முத்தரப்பு பேச்சு

சீனா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் நேற்று சீனாவின் செங்டு நகரில் முத்தரப்புப் பேச்சு நடத்தியுள்ளனர்.

பொருளாதார ஒத்துழைப்பு, வட கொரியாவின் அணுவாயுத மிரட்டல் ஆகியவை அவர்களது பேச்சில் முக்கியத்துவம் பெற்றிருந்தது. கொரியத் தீபகற்பத்தில் பதற்றத்தைத் தணிக்கும் வழிகள் குறித்துத் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அமெரிக்கா மற்றும் வட கொரியா இடையில் பதற்றம் அதிகரித்திருக்கும் நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. வட கொரியா கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையைப் பாய்ச்சத் தயாராகி வருவதாகக் கவனிப்பாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

“கிறிஸ்மஸ் பரிசாகத்” தனது நடவடிக்கை அமைந்திருக்கும் என்று ஏற்கனவே வட கொரியா மிரட்டல் விடுத்திருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டினர். இதற்கிடையே, ஜப்பானியப் பிரதமருக்கும், தென் கொரிய ஜனாதிபதிக்கும் இடையிலான தனிப்பட்ட சந்திப்பும் அணுக்கமாகக் கண்காணிக்கப்படும்.

கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாக அவர்களிடையே அதிகாரபூர்வமான சந்திப்பு இடம்பெறவில்லை. இருதரப்புக்குமிடையே வர்த்தகம், போர்க்கால விவகாரம் ஆகியவை தொடர்பான சர்ச்சைகள் நிலவுவது அதற்குக் காரணமாகும்.

Wed, 12/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை