பரீட்சையை நிறைவுசெய்தவர்களுக்கு வெகு விரைவில் ஆசிரிய நியமனம்

ஆசிரியர்களுக்கான பரீட்சையை நிறைவு செய்தவர்களுக்கு ஆசிரிய நியமனங்களை பெற்றுக்கொடுக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

மாகாண கல்வித்துறையுடன் பேச்சுவார்த்தை நடத்தி மேற்படி பிரச்சினைக்கு விரைவில் தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதாக குறிப்பிட்டுள்ள அவர் ஜனாதிபதி தமது கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ளது போல் அனைத்து ஆசிரியர்களையும் பட்டதாரிகளாக நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

தேசிய பாடசாலை ஆசிரியர்பரீட்சையில் சித்தியடைந்த பட்டதாரிகள் தமக்கு இதுவரை காலமும் ஆசிரியர் நியமனம் வழங்கப்படவில்லை எனக் கோரி நேற்று கல்வி அமைச்சுக்கு முன்னாள் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர்.

இதன்போது அவர்கள் தமது பிரச்சினைகள் சம்பந்தமாக கல்வி அமைச்சரிடம் மகஜரொன்றையும் சமர்ப்பித்தனர்.

ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினரால் கையளிக்கப்பட்ட அந்த மகஜரை பெற்றுக்கொண்ட கல்வி அமைச்சர் அவர்கள் மத்தியில் உரையாற்றுகையில்:

மேற்படி ஆசிரியர் நியமனம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்குத் தாம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் எவ்வாறெனினும், குறித்த ஆசிரியர் நியமனங்களை வழங்குவதற்கு வர்த்தமானி வெளியிடப்பட்ட வேளை அச் சமயம் நிலவிய வெற்றிடத்துக்காக மாகாண மட்டத்தில் நியமனங்கள் வழங்கப்பட்டிருந்ததால், வெற்றிடங்களின் எண்ணிக்கை 665 ஆக குறைந்திருந்தது. அதனால், குறித்த நியமனம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

எவ்வாறெனினும் விரைவில் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்றும் அவர் தெரிவித்தார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 12/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை