சு.கவை பலமிழக்க செய்து எவரும் தேர்தலை எதிர்கொள்வது கடினம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து பொதுத் தேர்தலை சந்திக்காவிடின் வெற்றிபெறுவது கடினமாகுமென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

சுதந்திரக் கட்சிக்கு 17 இலட்சம் வாக்குகள் உள்ளன. நாம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்திருந்தோம். குறைந்தபட்சம் 13 இலட்சம் வாக்குகளாவது சு.கவின் வாக்குகள் ஜனாதிபதிக்கு கிடைக்கப் பெற்றிருக்கும்.

குறித்த வாக்குகள் இல்லாவிடின் அவர் வெற்றிபெற்றிருப்பது கடினமாகும்.

சு.கவை பலமிழக்க செய்து

எவரும் தேர்தலை எதிர்க்கொள்ள நினைத்தால் அது கடினமாகும். சு.கவும் பொதுஜன பெரமுனவும் இணைந்து பொதுத் தேர்தலை சந்தித்தால் மாத்திரமே வெற்றிகொள்ள முடியும். எதிர்வரும் 5 வருடத்தினுள் நாட்டின் அனைத்து பிரச்சினைகளும் தீர்வு காணப்பட்டு அனைத்து துறைகளிலும் மறுமலர்ச்சி ஏற்படும். நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் தற்போது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. நாட்டின் எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டு பல பொருட்களின் இறக்குமதிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது என்றார்.

 

 

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Mon, 12/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை