யான் ஓயா வான் கதவு எந்த நேரத்திலும் திறக்கப்படலாம்

மக்கள் அவதானமாக இருக்குமாறு  எச்சரிக்கை

அடை மழை காரணமாக திருகோணமலை புல்மோட்டையில் அமைந்துள்ள யான் ஓயா பெருக்கக் கூடிய வாய்ப்பு இருப்பதால் புல்மோட்டை மற்றும் குச்சவெளி பிரதேச மக்கள் அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் கருத்து தெரிவிக்கையில்,

மழை இன்னும் ஓரிரு தினங்கள் நீடித்தால், யான் ஓயா வான் கதவு எந்த நேரத்திலும் திறக்கப்படலாம். திறக்கப்பபட்டால், மேற்கூறிய பிரதேசங்களில் வயல் நிலங்கள் மற்றும் காட்டு வெள்ளம் ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

தோப்பூர், மூதூர், ஈச்வலம்பற்று மற்றும் கிண்ணியா ஆகிய பிரதேசங்களில் உள்ள தாழ் நிலங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்துக்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. வெள்ள நீர் வடிந்தோடக் கூடிய வேலைத்திட்டங்களை சகல பிரதேச செயலகங்களும் மேற்கொண்டு வருகின்றன என்றும் தெரிவித்தார்.

இதேவேளை, கிண்ணி யா உப்பாறு கிராம சேவகர் பிரிவில் உள்ள மயிலப்பன் சேனை, சோள வெட்டுவான் ஆகிய விவசாய கிராமங்களுக்கான தரைவழிப்பாதை போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருக்கின்றது.

இதனால் 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இவர்களுடைய போக்குவரத்துக்காக வள்ளம் போடப்பட்டிருப்பதாக கிண்ணியா பிரதேச அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

 

கிண்ணியா மத்திய நிருபர் -

Thu, 12/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை