மன்னார் மாவட்ட அபிவிருத்தி நிதி திருப்பி அனுப்பப்பட கூடாது

அபிவிருத்திக்கென ஒதுக்கப்பட்ட நிதிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. மன்னார் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளை திருப்பி அனுப்பாது திட்டமிடப்பட்ட வேலைகளை செய்து முடிக்கும்படி வன்னி பாராளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன் வேண்டியுள்ளார்.

கடந்த திங்கள்கிழமை மன்னார் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தின் இவ் வருடத்துக்கான இரண்டாவது அமர்வு இதன் குழுக்கூட்டத்தின் தலைவர் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்ைகயில்

ஏற்கனவே இவ் மாவட்ட அபிவிருத்தி திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளை நிறுத்தி இவ் அபிவிருத்தி வேலைகளை முடக்குவது நல்லதல்ல.

இந்த நிதி மாவட்டத்துக்கு கிடைக்கப்பெற்ற ஒரு முதல். இவற்றை திருப்பி அனுப்புவது விரும்பத்தகாததொன்றாகும். மன்னார் பகுதியில் அதிகமான வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆகவே செய்யக்கூடிய வேலைகளை சீக்கிரம் செய்வது நலமாகும். அத்துடன் விடுபட்ட வேலைகளுக்கான நிதியை அடுத்த வருடம் கேட்டு பெற்றுக் கொண்டு விடுபட்ட வேலைத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

மன்னார் மாவட்டத்தின் முதலீடாக பெறப்பட்ட அபிவிருத்திக்கான பணத்தை திருப்பி அனுப்ப நேரிட்டால் அதை அரசாங்க அதிபரூடாக விண்ணப்பித்து மீண்டும் அந் நிதியை ஒதுக்கப்பட்ட வேலைத்திட்டங்களுக்கு செலவழிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

தலைமன்னார் நிருபர்

Sat, 12/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை