அம்பலாங்கொடை கிரிக்கெட் முன்னேற்றத்திற்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் வேலைத்திட்டங்கள்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் “கிரிக்கெட் கிராமத்துக்கு” வேலைத்திட்டத்தின் கீழ் நவீனமயப்படுத்தப்பட்ட செயற்கை புற்தரை (Astro Turf) யுடன் கூடிய பயிற்சி திடலுக்கான இரண்டு விக்கெட்டுகள் இலங்கை கிரிக்கெட் உபதலைவர் ரவீன் விக்ரமரத்ன தலைமையில் அம்பலாங்கொடை நகர சபை மைதானத்தில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த கிரிக்கெட் விக்கெட்டுகள் அம்பலங்கொடை ரியோ விளையாட்டு கழகத்துக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் பெற்றுக்கொடுத்த நிதி மூலமே அமைக்கப்பட்டது.

தற்போது துடுப்பாட்ட பயிற்சிக்கான அத்தியாவசிய உபகரணமான பந்து வீசும் இயந்திரமும் (Bowling Machine) இங்கு அமைக்கப்பட்டுள்ளது விசேட அம்சமாகும். அங்கு பேசிய உபதலைவர் ரவீன் விக்ரமரத்ன,

இப்பிரதேசத்தில் கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்ய பல வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்தார்.

மேலும் புதிய புற்தரை, ஏனைய பல வசதிகளுடன் அம்பலாங்கொடை நகர சபை மைதானத்தை முழுமையான கிரிக்கெட் மைதானமாக மாற்றும் திட்டத்துக்கு 16 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இலங்கை தேசிய அணிக்கு தலைவர்களை கூட பெற்றுக்கொடுத்த அம்பலாங்கொட நகருக்கு இவ்வசதிகளை பெற்று கொடுப்பதன் மூலம் மேலும் சிறந்த வீரர்களை உருவாக்க முடியுமென அம்பலாங்கொட ரியோ விளையாட்டு கழகத்தின் தலைவர் ஜயந்த ஜயவீர தெரிவித்தார். அம்பலாங்கொட பிரதான விளையாட்டு கழகங்களை தவிர அருகிலுள்ள பல பாடசாலைகளின் கிரிக்கெட் அணிகளுக்கும் இதன்மூலம் வசதிகள் கிடைக்கும். இந்நிகழ்வில் அம்பலாங்கொட நகர சபை தலைவர் அருண பிரதீப் உள்ளிட்ட நகரசபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

Tue, 12/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை