அம்பாறையில் அடைமழை; இயல்பு வாழ்க்ைக பாதிப்பு\

அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்தும் பெய்து வரும் அடைமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்ைக பாதிக்கப்பட்டுள்ளன. கல்முனை - நற்பிட்டிமுனை ஊடாக நாவிதன்வெளிக்கு செல்லும் கிட்டங்கி பாலத்தின் பிரதான வீதியில் கடந்த இரண்டு தினங்களாக வெள்ளநீர் பெருக்கெடுத்துள்ளது.

இந்த வீதிக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டால் கல்முனையிலிருந்து நாவிதன்வெளிக்கு கடமைக்கு செல்லும் அலுவலக உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக் கணக்கானோர் பாதிக்கப்படுவார்கள். இதேவேளை கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழை காரணமாக தாழ்நிலங்கள் நீரில் மூழ்கி வருகின்றன.

கல்முனை, பாண்டிருப்பு, பெரியநீலாவணை, காரைதீவு, நிந்தவூர், பாலமுனை போன்ற கரையோரத்தை அண்டிய பகுதிகளில் வெள்ளநீர் தேங்கிக் கிடப்பதால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு மாவட்ட அனர்த்த முன்னெச்சரிக்கை நிலையம் பொதுமக்களை கேட்டுள்ளது.

 

(பெரியநீலாவணை விசேட நிருபர்)

Tue, 12/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை