பிரதமரின் வழிகாட்டலில் 'கிராமத்திற்கொரு வீடு' திட்டம்

 'கிராமத்திற்கொரு வீடு' எனும் எண்ணக்கருவின் கீழ் 14,022 கிராமங்கள் தோறும் ஒரு வீடு வீதம் நிர்மாணிக்கும் புதிய வீடமைப்பு செயற்றிட்டமொன்றை ஜனவரி மாதத்தில் ஆரம்பிப்பதற்கு பிரதமரும் நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

கிராமிய சமுர்த்தி அலுவலரின் ஒத்துழைப்புடன் ஒவ்வொரு கிராமத்திலுமுள்ள மிகவும் வறிய குடும்பமொன்றினை

தேர்ந்தெடுத்து இந்த வீடமைப்பு செயற்றிட்டத்தினை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டிற்குள் 'கிராமத்திற்கொரு வீடு' எனும் வேலைத் திட்டத்தின் கீழ் 14,022 வீடுகளை நிர்மாணிப்பதற்கு வீடமைப்பு இராஜாங்க அமைச்சருக்கு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

கடந்த அரசின் ஆட்சிக்காலத்தில் பாரியளவு வீடமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டதென விளம்பரப்படுத்தினாலும், அந்த 4 1/2 ஆண்டுகளுள் முழு நாட்டிலுமே மொத்தமாக 7000 இற்கு குறைவான வீடுகள் மாத்திரமே நிர்மாணிக்கப்பட்டதென பிரதமர் சுட்டிக்காட்டினார்.

வீடற்ற மக்களுக்கு முறையான வசதிகள் மற்றும் தரமான வீடுகளை வழங்க வீடமைப்பு வசதிகள் அமைச்சும் நகர அபிவிருத்தி அதிகாரசபையும் இணைந்து பல வேலைத் திட்டங்களை எதிர்வரும் காலங்களில் நாடு முழுவதும் செயற்படுத்துவதற்கு எண்ணியுள்ளதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறினார்.(ஸ)

 

Tue, 12/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை