என் மீதான குற்றச்சாட்டுக்களில் எந்தவொரு உண்மையும் இல்லை

சில தனியார் ஊடகங்கள் தொடர்ச்சியாக தன்மீது சுமத்தும் எந்த ஒரு குற்றச்சாட்டையும் நிரூபிக்க முடியாதெனவும் வேண்டுமென்று சோடிக்கப்பட்டே அவை முன்வைக்கப்படுவதாகவும் முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அவை தொடர்ச்சியாக அபாண்டங்களை பரப்பினாலும் உண்மைகளை பொய்யாக்கி விட முடியாதெனவும் அவர் தெரிவித்தார்.

வவுனியா சின்ன சிப்பிக்குளம் தாருல் உலூம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு நேற்று முன்தினம் (30) சனிக்கிழமை இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசும்போதே அவர் இதனைக் கூறினார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்; நான் இதுவரை ஒரு ரூபாவேனும் அரச பணத்தை கையாடியது இல்லை. ஒரு கோப்பை  தேநீரோ, ஒரு குவளை தண்ணீரோ ஹராமாக பருகியதும் இல்லை, உண்டதும் இல்லை. இஸ்லாமிய வழிமுறையில் வாழ்ந்து வருபவன் நான்.

எனவேதான் எத்தனை தடைகள் வந்த போதும், எமது அரசியல் பயணத்திற்கும் மக்கள் பயணத்திற்கும் இறைவன் உதவி வருகின்றான். தொடர்ந்தும் அந்த உதவி எமக்கு இருக்கும் என்பதிலும் நம்பிக்கை கொண்டிருக்கின்றோம். நாம் எவருக்கும் அநீதி இழைத்ததில்லை, தீங்கு செய்ததில்லை. நல்லதே செய்திருக்கின்றோம்; நேர்மையாக செயலாற்றிருக்கின்றோம். இந்துக்கள், பெளத்தர்கள், முஸ்லிம்கள் , கத்தோலிக்கர் என்ற பாகுபாடின்றி பணியாற்றிருக்கின்றோம்.

Mon, 12/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை