உலகின் வயதான காண்டாமிருகம் இறந்தது

உலகின் வயதான பாஸ்டா என்ற பெண் காண்டாமிருகம் தன்சானியாவில் உடல் நலக்குறைவால் உயிரிழந்தது. இந்த காண்டாமிருகம் 3 வயதாக இருந்தபோது, 1965ஆம் ஆண்டு, நொகோரோங்கோரோ பள்ளம் என்ற இடத்தில் முதன்முதலாக காணப்பட்டது.

54 ஆண்டு காலம் அந்தப்பகுதியிலேயே அது சுற்றித்திரிந்து வந்தது. வயதான காலத்தில் நோய்களால் அவதியுற்று வந்த அந்த காண்டாமிருகம் வனவிலங்கு புகலிடத்துக்கு கொண்டு வரப்பட்டு, சிறப்பாக பராமரிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த 27ஆம் திகதியன்று அந்த காண்டாமிருகம் வயோதிகத்தாலும், உடல்நலக்குறைவாலும் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. பொதுவாக காண்டாமிருகங்கள் 37 வயது முதல் 43 வயது வரை உயிர்வாழும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tue, 12/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை