ஆபத்தான நீர் நிலைகளில் நீராடுவதை தவிர்க்கவும்

ஆபத்தான நீர் நிலைகளில் நீராடுவதை தவிர்க்கவும்-Do not bath in reservoir

தற்போது மழையுடன் கூடிய கால நிலை நிலவுவதினால் ஆபத்தான நீர் நிலைகளில் நீராடுவதை இளைஞர்கள்  தவிர்க்கவேண்டும் என உயிர்பாதுகாப்பு பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீர் நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள், இளைஞர்கள் நீர் நிலைகளில் நீராடுவதை தவிர்க்கவேண்டும் எனகேட்டுள்ளனர். இதுதொடர்பான அறிவித்தல்களை பிரதேச பொலிஸ் நிலையங்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் விடுத்துள்ளனர்.

நாட்டின் பல பாகங்களிலும்கடும் காற்றுடன் கூடிய மழைபெய்துவருகின்றது. இதனால் தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கிழக்கில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகியமாவட்டங்களில் வெள்ளத்தினால் மக்கள் அதிக பாதிப்புக்களை சந்தித்துள்ளனர்.

இந்நிலையில் நகர்ப்புறங்களையும் கிராமப்புறங்களையும் இணைக்கும் தாம்போதிகள் ஊடாக வெள்ள நீர் பாய்ந்துவருகின்றது. இதனால் போக்குவரத்துக்களும் துண்டிக்கப்பட்டுள்ளது.

வெள்ளநீர் பாய்ந்தோடும் வீதிகளில் பாதுகாப்பு பணியில் படையினர் ஈடுபட்டுவருகின்றனர். பொதுமக்களை படகுகள் மூலம்  ஏற்றியிறக்கும்  பணியில் உயிர்பாதுகாப்பு மீட்பு படையினரும் சேவையில் ஈடுபட்டுள்ளனர்.

ஆழம்மிக்க கடல்பகுதிகள் மற்றும் ஆறுகள், குளங்களில் நீராடிய பலர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

மழை வெள்ளம் காரணமாக முதலைகள், விசப்பாம்புகள் மற்றும் ஏனைய ஜந்துக்களின் நடமாட்டமும் அதிகரித்துள்ளன.  இக்காலப்பகுதியில் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதுடன் ஆபத்தான நீர் நிலைகளில் நீராடுவதை தவிர்க்கவும் என கேட்கப்பட்டுள்ளனர்

(பாண்டிருப்பு தினகரன் நிருபர் - துஜியந்தன்)

Sun, 12/08/2019 - 12:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை