மிகப்பெரிய ரோமானிய கப்பல் கண்டுபிடிப்பு

கிழக்கு மத்தியதரைக் கடலில் இரண்டாயிரம் ஆண்டு பழமையான 110 அடி நீளம் கொண்ட கப்பல் சிதைவு ஒன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மற்றும் கடல் வரலாற்றில் கண்டுபிடிக்கப்பட்ட நான்காவது மிகப்பெரிய கப்பலாக இது உள்ளது. பெட்ராஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்களே இந்தக் கப்பலை கண்டுபிடித்துள்ளனர்.

கி.மு 100 மற்றும் கி.பி 100க்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த இந்த சரக்குக் கப்பல் 6,000 பானைகளில் வைன் மற்றும் ஆலிவ் எண்ணெய்யை எடுத்துச் செல்லும் வழியில் மூழ்கியுள்ளது. கிரேக்க தீவான கெபாலோனியாவுக்கு அப்பால் இந்தக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Wed, 12/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை