சாய்ந்தமருதில் கலைத்துறைக்கு சேவையாற்றியோருக்கு கௌரவம்

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் சாய்ந்தமருது பிரதேசத்தில் கலைத்துறைக்கு சேவையாற்றிய கலைஞர்களை வீடு வீடாகச் சென்று கௌரவிக்கும் 'கலைஞர் சுவதம் - 2019' விருது வழங்கும் நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸ் தலைமையில் இடம்பெற்றது.

சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் அதிபர் ஏ.எச்.அப்துல் பஷீர் நாவல், சிறுகதை, நாடகம், கவிதைத்துறைக்காகவும் ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரியர் எம்.எம்.காஸிம் வரலாற்றாய்வுக்காகவும் நினைவுச் சின்னம், சான்றிதழ் மற்றும் பரிசுப் பொருள் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.

இந்நிகழ்வுக்கு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சட்டத்தரணி ஏ.எம்.அப்துல் லத்தீப் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் ரீ.எம்.றிம்ஸான், சாய்ந்தமருது பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர்களான ஏ.எச்.ஏ.சபிக்கா, ஏ.எச்.ஏ.அம்ஜத், முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.சீ.ஜெஸீரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அம்பாறை மாவட்ட ஜம்மிய்யதுல் உலமா சபையின் தலைவர் மௌலவி எஸ்.எச்.ஆதம்பாவா வரலாற்றாய்வுக்காகவும் யூ.எஸ்.முபிதா உஸ்மான் ஊடகத்துறைக்காகவும், எம்.வி.சலீம் பொல்லடிக்காகவும் ஏ.சீ.சலாம் சித்திரம் எழுத்துத்துறைக்காகவும் எம்.எம்.எம்.பாசில் பாடகர், கவிதைக்காகவும் கௌரவிக்கப்படவுள்ளனர்.

 

சாய்ந்தமருது தினகரன் நிருபர்

 

Wed, 12/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை