சர்வதேச கரம் பெடரேஷன் சம்பியன்ஷிப்: இலங்கை அணி இந்தியா பயணம்

எட்டாவது ஐ.சி.எப் (சர்வதேச கரம் பெடரேஷன்) கரம் செம்பியன்ஷிப் - 2019 போட்டியில் கலந்து கொள்ளும் தேசிய அணியை விளையாட்டுத் துறை அமைச்சர் அங்கீகரித்துள்ளார். தேசிய கரம் தெரிவுக் குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட இந்த தேசிய அணியில், தேசிய தரவரிசையில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளில் முன்னிலை வகிக்கும் வீரர்கள் உள்ளடங்கியுள்ளனர். இந்தச் சுற்றுப் போட்டிகள் இன்று 2ம் திகதி முதல் 6ம் திகதி வரையில் இந்தியாவின் மும்பாய் பூனேயில் சர்வதேச கரம் பெடரேஷன் மற்றும் அகில இந்திய கரம் பெடரேஷன் என்பவற்றின் தலைமையில், மஹாராஸ்டரா கரம் சங்கம் மற்றும் பூனே கரம் சங்கம் என்பவற்றின் ஏற்பாட்டில் இடம்பெறுகின்றது.

இச்சுற்றுப் போட்டியில் கலந்து கொள்ளும் இலங்கை அணி நவம்பர் 30ம் திகதி சனிக்கிழமை புறப்பட்டுச் சென்றதோடு, விளையாட்டுத் துறை அமைச்சின் வளாகத்தில் பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

தேசிய தர வரிசையில் முன்னணி வகிக்கும் ஆண்கள் மற்றும் பிரிவுகளைச் சேர்ந்த வீரர்கள் இலங்கையில் அணியைப் பிரதிநிதிப்படுத்துவதோடு, இலங்கை கடற்படையைச் சேர்ந்த நிசாந்த பெர்னாண்டோ மற்றும் ஜோசப் ரொசித்தா ஆகியோர் ஆண்கள் மற்றும் பெண்கள் அணித்தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஐ.சி.எப் சம்பியன்ஷிப் போட்டிக்கான நான்கு வருடங்களுக்கு ஒரு தடவை இடம்பெறுவதோடு, இப்போட்டிகளில் ஆண்கள் தனியாள், பெண்கள் தனியாள், ஆண்கள் இரட்டையர், பெண்கள் இரட்டையர், ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணி என ஆறு போட்டிகள் இடம்பெறுகின்றன. அத்துடன் இப்போட்டிகளில் இலங்கை, இந்தியா, மாலைதீவு, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட 16 நாடுகள் கலந்து கொள்ளவுள்ளன.

இலங்கை ஆண்கள் அணி நடப்பு வருட உலக செம்பியனாகவும், பெண்கள் அணி நடப்பு வருட ரன்னர் அப் அணியாகவும் இச்சுற்றுப் போட்டியில் கலந்து கொள்கின்றது. 2012ம் ஆண்டின் தனியாள் போட்டியில் உலக செம்பியன் பட்டம் பெற்ற நிசாந்த பெர்னாண்டோ மற்றும் நடப்பாண்டின் தேசிய செம்பியனான சஹீட் ஹில்மி ஆகியோர் இலங்கை அணியின் தலைவர்களாகச் செயற்படுகின்றனர்.

இருந்த போதிலும் சமில் குரே மற்றும் சலணி லியனகே ஆகியோர் தனிப்பட்ட காரணங்களினால் இச்சுற்றுப் போட்டியில் கலந்து கொள்ளாததால் இவர்களின் பற்றாக்குறை இலங்கை தரப்பினருக்கு மோசமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். இலங்கை கரம் பெடரேஷன் உப தலைவர் சுசந்த பெர்னாண்டோ மற்றும் உதவிச் செயலாளர் கருணாரத்ன ஜயசிங்க ஆகியோர் இச்சுற்றுப் போட்டியின் அதிகாரிகளாக கலந்து கொள்ளுகின்றனர்.

 

Mon, 12/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை