வர்த்தக ஒப்பந்தத்திற்கு சீனா, அமெ. இணக்கம்

சீனாவுடனான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்கா இணக்கம் கண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நேற்று அறிமுகமாகவிருந்த புதிய வரிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஆனால், நடப்பில் இருக்கும் வரிகள் தொடர்ந்து நீடிக்கும் என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலுக்குப் பின்னர் பேரப் பேச்சுவார்த்தை நடத்த முதலில் அமெரிக்கா விரும்பியதாகவும் ஆனால், சீனாதான் அதனை உடனடியாக நடத்தக் கோரிக்கை விடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

வரும் ஜனவரி மாத ஆரம்பத்தில் அந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்ப்பதாக அமெரிக்காவின் வர்த்தகப் பிரதிநிதி ரொபர்ட் லைத்தீசர் கூறினார்.

அடுத்த ஈராண்டுகளுக்கு அமெரிக்க வேளாண் பொருட்களை வாங்குவதற்குச் சீனா இணங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Mon, 12/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை