தீர்வு காண சுவிஸ் அரசாங்கத்தின் விசேட பிரதிநிதி இலங்கை வருகை

சுவிஸ் தூதரக அதிகாரி விவகாரம்;

சுவிட்சர்லாந்து பெண் விவகாரம் தொடர்பாக இலங்கை மற்றும் சுவிஸ் நாடுகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள இராஜதந்திர ரீதியான பிரச்சினையை தீர்வுகாணும் வகையில் சுவிஸ் அரசாங்கம் தனது விசேட பிரதிநிதி ஒருவரை இலங்கைக்கு அனுப்பியுள்ளது.

இதற்காக இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவராக முன்னர் பணியாற்றியவரும் சிறந்த இராஜதந்திரியுமான ஜோர்ஜ் ப்ரீடனையே அனுப்பிவைத்துள்ள நிலையில் அவர் இலங்கையை வந்தடைந்துள்ளார்.

குறித்த சர்ச்சைக்குரிய விவகாரத்துக்கு தீர்வுகாணும்  வகையில் சுவிட்சர்லாந்து அரசாங்கம் தொடர்ந்தும் இலங்கையுடன் உயர்மட்ட பேச்சுக்களை நடத்தி வருகிறது.

இதனடிப்படையில் சுவிஸ் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் இக்னோசியோ கெஸிஸ் இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கு கடந்த 18 ஆம் திகதி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியிருந்தார்.

இதன்போது இலங்கையில் சுவிஸ் தூதுவராக முன்னர் பணியாற்றிய ஜோர்ஜ் ப்ரீடனை இலங்கைக்கு அனுப்புவதாக தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக தெளிவுபடுத்துவதற்கு அனுபவம் மிகுந்த இராஜதந்திரியான ப்ரீடன் ஒத்துழைப்பு வழங்குவார் என்று தெரியவருகிறது.

இதேவேளை சுவிஸ் தூதரக பெண் அதிகாரியின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு முக்கியமானது என சுவிட்சர்லாந்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சு கருதுகிறது. தூதரக அதிகாரி மீதான எதிர்கால விசாரணைகளின் போது அவை பாதுகாக்கப்படுவதை இலங்கை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் சுவிட்சார்லாந்தின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தொலைபேசி உரையாடலின் போது வலியுறுத்தியுள்ளார்.

தொலைபேசி உரையாடலையடுத்து இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன கொழும்பிலுள்ள சுவிஸ் தூதுவர் மொக் மற்றும் சுவிஸில் இருந்து வருகை தந்த ப்ரீடன் ஆகியோரை சந்தித்தார்.

தற்போதைய விடயத்தில் அப்பாவி என்ற அனுமானத்தை பின்பற்றும் கொள்கையை வலியுறுத்திய சுவிஸ் தூதுவர்கள் தமது தூதரக ஊழியரின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்புக்கு முக்கியம் தருவதாகவும் சுவிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Sat, 12/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை