புத்தாக்க முயற்சிகளை ஊக்குவிப்பது குறித்து அரசாங்கம் முக்கிய கவனம்

புத்தாக்கத்தை ஊக்குவிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் முக்கியத்துவத்தை கொடுப்பதுடன், புத்தாக்க முயற்சிகளில் ஈடுபடும் இளைஞர், யுவதிகள் குறித்து முக்கிய கவனத்தையும் செலுத்தியுள்ளதென அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

அதேபோன்று சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகத்திற்கும் கைத்தொழில் அபிவிருத்தி குறித்தும் அரசாங்கம் அதிமுக்கியத்துவம் கொடுத்துவருவதாகவும் அவர் கூறியுள்ளார்.  பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்சதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

வாழைநார் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட நூலில் ஆடைகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இளவரசர் விஜயன் இலங்கைக்கு வருகை தந்தபோது குவேனி பருத்தி நூலில் ஆடை தயாரித்துக்கொண்டிருந்தார் என்று நாங்கள் பெருமையாக பேசுகிறோம். எமது ஆடை உற்பத்தித் துறைக்கு ஒரு வரலாறு உள்ளது. அத்தகைய வரலாறு இருந்தபோதிலும் அதற்கு ஏற்றவாறு ஒரு பதில் இன்று எம்மிடமில்லை.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Mon, 12/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை