பிரிட்டிஷ் தேர்தலில் தாக்கம் செலுத்தும் காஷ்மீர் விவகாரம்

பிரிட்டனில் இம்மாதம் 12 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் காஷ்மீர் விவகாரம் தாக்கத்தை

ஏற்படுத்துமென ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டனை சேர்ந்த கட்சிகளும், காஷ்மீர் பிரச்சினையில் தங்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளன. ஆனால் அவைகள் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைத்திருக்கின்றன.தெற்காசிய மக்களின் வாக்குகள் முக்கியமானதாகக் கருதப்படும் 48 இடங்களில் காஷ்மீர் விவகாரம் தாக்கத்தை ஏற்படுத்தும். பிராட்போர்டின் மக்கள் தொகையில் 43 சதவீதம் தெற்காசிய வம்சாவழியைச் சேர்ந்தவர்களாவர்.

பாகிஸ்தானின் மிர்பூரைச் சேர்ந்த ஏராளமான மக்கள் இங்கு வசிக்கின்றனர். இங்கு தேர்தலில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்கள் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

கட்சிகளின் காஷ்மீர் குறித்த கொள்கைகள், தாங்கள் வாக்களிக்கும் விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இங்குள்ள வாக்காளர்கள் கூறுகின்றனர்.

வடக்கு பிரிட்டனில் உள்ள பிராட்போர்ட் நகரில் காஷ்மீர் பற்றி எதாவது குறிப்பிடாமல், உரையாடலோ அல்லது விவாதமோ முழுமையடையாது.

ஆகஸ்ட் 5 ஆம் திகதி இந்திய அரசு ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்புரிமை தரும் 370 வது பிரிவை அகற்றி அதன் தனித் தன்மையை முடிவுக்கு கொண்டுவந்து மாநிலத்தை இரண்டாகப் பிரித்தது.இதனால், பிராட்போர்டில் வாழும் இந்திய மற்றும் பாகிஸ்தான் சமூகங்களிடையே, இது பிரச்சினையாக பெரிய அளவில் உருவெடுத்தது.

Tue, 12/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை