முல்லைத்தீவில் தொண்டர் ஆசிரியர்கள் அமைச்சருடன் சந்திப்பு

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு நேற்று சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தொண்டர் ஆசிரியர்கள் சந்தித்தனர். முல்லைத்தீவு பிரதேச சபை மண்டபத்தில் மக்கள் சந்திப்புக்களை அமைச்சர் நடத்தியபோதே இச் சந்திப்பு நடந்துள்ளது.

மாவட்டத்திலுள்ள முன்பள்ளி ஆசிரியர்கள் தமது பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் தெரியப்படுத்தியிருந்தனர். இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர்,

எமது எதிர்கால சிறார்களினது நலன்களை கருத்திற் கொண்டு முன்பள்ளி ஆசிரியர்களின் ஆற்றல்கள் மேலும் மேம்படுத்தப்பட்டு அவர்களது சேவையை விரிவு படுத்துவதுடன் பொருளாதார ரீதியிலும் அவர்களை தூக்கி நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள முயற்சிகள் எடுக்கப்படும். அதுவே எமது ஆழ்மன விருப்பமுமாகும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இதன்போது பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியில் நீண்ட காலமாக முன்பள்ளிச் சிறார்களின் கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்திருக்கும் நிலையில் இதுவரை தாம் நிரந்தர நியமனத்தில் உள்வாங்கப்படவில்லை எனவும் இதனால் தாம் பல்வேறு அசௌகரியங்களை நாளாந்தம் எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவித்ததுடன் தமக்கு நிரந்தர நியமனம் பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு தருமாறும் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 230 முன்பள்ளி ஆசிரியர்கள் அமைச்சரை சந்தித்து கலந்துரையாடினர்.

வெளிநாடுகளுக்கும் முன்பள்ளி அசிரியர்களை அனுப்பி நவீனத்துவத்துடன் கூடிய ஆளுமை மிக்க பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என்பதே எனது திட்டமாக உள்ளது என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்

 

 

Sat, 12/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை