பின்லாந்து பிரதமரிடம் எஸ்தோனியா மன்னிப்பு

பின்லாந்தின் புதிய பிரதமர் சன்னா மரினை ‘விற்பனைப் பெண்’ எனத் தமது உள்துறை அமைச்சர் அழைத்ததற்கு எஸ்தோனிய ஜனாதிபதி மன்னிப்புக் கேட்டுள்ளார்.

உள்துறை அமைச்சர் மார்ட் ஹெல்மே, தமது கட்சியின் வானொலி நிகழ்ச்சியில் இவ்வாறு கூறியிருந்தார். ஒரு விற்பனைப் பெண் பின்லாந்தின் பிரதமராகியிருப்பதாகவும், படிக்காதவர்கள் அமைச்சரவையில் சேர்ந்திருப்பதாகவும் அவர் கூறினார்.

அவரது கருத்துகள் தமக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருப்பதாக எஸ்தோனிய ஜனாதிபதி கெர்ஸ்ட்டி கலிஜுலாய்ட் குறிப்பிட்டார்.

மரின் தமது குடும்பத்தில் உயர்நிலைப் கல்வியை முடித்த முதல் நபர். அவர் பல்கலைக்கழகத்திற்குச் செல்வதற்கு முன், விற்பனையாளராகப் பணி புரிந்துள்ளார்.

34 வயது மரின், உலகில் பிரதமர் பொறுப்பை ஏற்றுள்ள மிக இளம் வயதுடையவராவார்.

எஸ்தோனியா மூன்று பால்டிக் நாடுகளில் அதிக வடக்காக இருப்பதோடு பின்லாந்துடன் மொழி ரீதியில் நெருங்கிய உறவு கொண்டுள்ளது.

Wed, 12/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை