சட்டவிரோத மணல் அகழ்வு அதிகரிப்பு தடுத்து நிறுத்துமாறு மக்கள் கோரிக்கை

யாழ்.குடத்தனை, குடாரப்பு பகுதிகளில் அனுமதியின்றி நூற்றுக் கணக்கான டிப்பர் வாகனங்கள் மணல் அகழ்வில் ஈடுபடுவதாகவும் இதனை தடுக்குமாறும் அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மணல் மற்றும் மண் , கல் என்பன எடுத்துச் செல்வதற்கு அனுமதிப் பத்திரம் அவசியம் இல்லை என அறிவிக்கப்பட்ட நிலையில் திருட்டு மணல் அகழ்வில் நூற்றுக் கணக்கான டிப்பர் வண்டிகள் ஈடுபடுகின்றன. முன்பு கடற்கரைகளில் உழவு இயந்திரங்களில் அகழ்ந்து கொண்டு வரப்பட்டே டிப்பர் வண்டிகளிற்கு மாற்றப்பட்டன. ஆனால் தற்போது நேரடியாகவே டிப்பர் வண்டிகளில் ஏற்றிச் செல்லப்படுகின்றன. இவ்வாறு நேரடியாகவே டிப்பர் வண்டிகளில் ஏற்றிச் செல்வதனால் டிப்பர் வண்டிகள் கடற்கரைப் பிரதேசத்திற்கு செல்ல மாட்டாது என்பதால் கிராமத்தின் மையப் பகுதிகளிலும் மணல் அகழப்படுகின்றது.

இதனை தடுக்காது விட்டால் பாரிய அனர்த்தங்கள் நிகழும் வாய்ப்பும் உள்ளது. இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கினால் பொலிஸார் வருவது கிடையாது. இதனால் பிரதேச செயலாளருக்கு தகவல் வழங்கியுள்ளோம். ஆனாலும் மணல் கொள்ளை தொடர்ந்து இடம்பெறுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

 

கோப்பாய் நிருபர்

Wed, 12/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை