ஒலிம்பிக் போட்டியின் போது மீள்சுழற்சி செய்யப்பட்ட ஆடைகள் பயன்படுத்த தீர்மானம்

ஜப்பான் ஒலிம்பிக் போட்டியின் போது மீள்சுழற்சி செய்யப்பட்ட ஆடைகள் பயன்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டோக்கியோவில் எதிர்வரும் 2020ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ளது.

இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை ஜப்பான் அரசாங்கம் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றது.

இந்தநிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், பசுமை ஒலிம்பிக் போட்டியாக நடத்த ஜப்பான் திட்டமிட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக மீள்சுழற்சி முறையின் மூலம், போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்கள் அணியும் ஆடைகளை வடிவமைக்க ஜப்பான் தீர்மானித்துள்ளது.

இதற்காக மக்களிடமிருந்து பழைய ஆடைகள் திரட்டப்பட்டு வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்மூலம் சுற்றுச்சூழல் காக்கப்படுவதுடன், தங்களின் உடைகளை அணிந்து சர்வதேச வீரர்கள் ஆடுகிறார்கள் என்ற திருப்தியையும் ஜப்பான் மக்கள் என அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

Thu, 12/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை