சம்மாந்துறையில் சொகுசுபஸ் விபத்து

திருமலை செல்லும் சொகுசு மினிபஸ்ஸொன்று இன்று (22) சம்மாந்துறையில் விபத்துக்குள்ளானது.

தினமும் அம்பாறையிலிருந்து திருகோணமலை செல்லும் குளிரூட்டப்பட்ட சொகுசு மினிபஸ் ஒன்று சம்மாந்துறை வீரமுனை ஆண்டியடிச் சந்திக்கருகில் கட்டுபாட்டையிழந்து மதகுக்கு அருகேயுள்ள வாய்க்காலுக்குள் வீழ்ந்துள்ளது.

பஸ்ஸில் பயணம் செய்தவர்கள் தெய்வாதீனமாக சிறுசிறு காயங்களுடன் தப்பினர். சம்மாந்துறைப் பொலிசார் விபத்துபற்றிய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சகாதேவராஜா - காரைதீவு குறூப் நிருபர்

Sun, 12/22/2019 - 15:21


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை