புதிய அரசுக்கு மத்திய கிழக்கு நாடுகள் தொடர்ந்தும் ஒத்துழைப்பு

தூதுவர்கள் ஜனாதிபதியிடம் உறுதி

புதிய அரசாங்கத்திற்கு மத்திய கிழக்கு நாடுகளின் ஒத்துழைப்பு தொடர்ந்தும் வழங்கப்படும் எனவும், பொருளாதார மற்றும் கலாசார நடவடிக்கைக்காக எதிர்காலத்தில் இலங்கைக்கு தேவையான ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பதாகவும் மத்தியகிழக்கு தூதுவர்கள் தெரிவித்தனர்.

மத்திய கிழக்கு தூதுவர் குழுமத்தை பிரதிநிதித்துவம் செய்யும் நாடுகளின் தூதுவர்கள் நேற்று (09) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை சந்தித்தனர்.

மேலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு தமது வாழ்த்துகளை தெரிவித்த தூதுவர்கள், ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கைக்கும் தமது நாடுகளுக்குமிடையிலான தொடர்புகளை அனைத்து துறைகளிலும் பலப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக உறுதியளித்தனர்.

பலஸ்தீன, எகிப்து, குவைத், ஓமான், ஈராக், லிபியா மற்றும் கட்டார் நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கைக்கான தூதுவர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Tue, 12/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை