ஊடகவியலாளர்கள் அதிகம் பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாடு சீனா

உலகில் சீனாவில் இந்த ஆண்டு பத்திரிகையாளர்கள் அதிகம் பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக பத்தரிகையாளர்கள் பாதுகாப்புக் குழு தெரிவித்துள்ளது.

சீனாவில் பத்திரிகையாளர்கள் சுதந்திரம் நாளுக்கு நாள் குறைக்கப்பட்டு அடக்குமுறைக்கு உள்ளவதாக குற்றச்சாட்டுகள் அவ்வப்போது எழுந்த வண்ணம் உள்ள நிலையில் இந்தக் குழுவின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயற்படும் பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக் குழுவின் அறிக்கையில், “உலகம் முழுவதும் 2019 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 250 பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு 255 பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த ஆண்டு பத்திரிகையாளர்கள் அதிகம் பேரை சிறையில் அடைத்த நாடு சீனா. சுமார் 48 பத்திரிகையாளர்களை சீனா சிறையில் அடைத்துள்ளது.

சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங் அரசியல் ரீதியாக சீனாவில் தனது கட்டுப்பாட்டை அதிகப்படுத்தியதில் இருந்து இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த தகவலில் நம்பகத்தன்மை இல்லை என பீஜிங்கில் நடந்த மாநாடு ஒன்றில் அந்நாட்டு வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங்கி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Fri, 12/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை