எத்தகைய கூட்டணி அமைத்தாலும் மொட்டு சின்னத்திலேயே போட்டி

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு எத்தகைய கூட்டணியை அமைத்தாலும் மொட்டு சின்னத்திலேயே பொது ஜன பெரமுன போட்டியிடும் என ஏற்றுமதி முதலீட்டு ஊக்குவிப்பு, சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதனைக்கூறினாலும் நாம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் மொட்டுச் சின்னத்திலேயே போட்டியிடுவோம்

கட்சித் தலைவர்களுடன் எத்தகைய உடன்படிக்கைகளை செய்துகொண்டாலும் மக்களுக்கு அவர்களுடன் ஏற்படுத்திக்கொண்டுள்ள உடன்படிக்கையே முக்கியமாகிறது என தெரிவித்த அமைச்சர், எவருடனும் அல்லது எந்தக் கட்சியுடனும் உடன்படிக்கை செய்துகொண்டாலும் மக்கள் எதிர்பார்ப்பு என்னவென்பதை தெரிந்துகொண்டே அதற்கிணங்க செயற்படவேண்டும் என்றும் தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதனைக்கூறினாலும் நாம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் மொட்டுச் சின்னத் திலேயே போட்டியிடுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

அத்தனகல்ல தேர்தல் தொகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் பிரசன்ன:

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர 27 கட்சிகளுடன் அக்கட்சி உடன்படிக்கை செய்துகொண்டுள்ளதாகவும், அந்த உடன்படிக்கைக்கிணங்க எதிர்வரும் பொதுத் தேர்தலில் நாற்காலி சின்னத்திலேயே போட்டியிடவேண்டுமென்றும் தெரிவித்து வருகின்றார்.

அந்தக் கட்சியின் தலைவர்கள் எத்தகைய உடன்படிக்கைகளை மேற்கொண்டாலும் இந்த நாட்டின் மக்களோடு செய்துகொண்டுள்ள உடன்படிக்கையே பெறுமதியானதாகும்.

தற்போது நாட்டு மக்கள் எம்முடனேயே உள்ளனர். எம்முடன் உடன்படிக்கை செய்தாயிற்று. அந்த உடன்படிக்கை மொட்டு கட்சியை வெற்றிபெறச் செய்வதே. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Mon, 12/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை