நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலை

நுவரெலியா மாவட்டத்தில் வலப்பனை,கொத்மலை,ஹங்குராங்கெத்த மற்றும் நுவரெலியா ஆகிய செயலக பிரிவுகளில்  நேற்று 241  குடும்பங்களைச்  சேர்ந்த 731பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட  செயலாளர் ரோகன புஸ்பகுமார தெரிவித்தார்.

13பாதுகாப்பான இடங்களில் 112குடும்பங்களை  சேர்ந்த 298  பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன் 86குடும்பங்களை  சேர்ந்த 297பேர் அவர்களின் உறவினர்  வீடுகளில் தங்கியுள்ளனர்.  அப்பகுதியில் உள்ள பாதிப்படையாத 43வீடுகளில் 196பேர் தங்கியுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர்  குறிப்பிட்டார்.

வாகன சாரதிகள் பனி மூட்டம் மற்றும் மழையுடனான காலநிலை நிலவும் போது தமது வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்தவாறு பயன்படுத்துவதன் மூலம் விபத்துக்களை தவிர்த்து கொள்ளலாம் என ஹற்றன் போக்குவரத்து பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

இதே வேளை நேற்றுமுன்தினம் இரவு முதல் தொடர்ச்சியாக மழையுடனான காலநிலை நிலவி வருவதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  

கால் நடை வளர்ப்பாளர்கள் தமது கால் நடைகளுக்கு தேவைகளான புற்களை அறுக்க முடியாது பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.  இதேவேளை தொடர் மழை காரணமாக தேயிலை தொழிலில் ஈடுபடுபவர்களின் வருகை குறைந்து காணப்படுவதனால் தேயிலை உற்பத்தியும் வீழ்ச்சி கண்டு வருவதாக தோட்ட நிர்வாகங்கள் தெரிவிக்கின்றனர்.  

ஹற்றன் விசேட நிருபர்

Sat, 12/21/2019 - 09:43


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை